Rock Fort Times
Online News

திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தற்கொலை…

திருச்சி பீமநகர் தேவர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( 65 ). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மகளை நினைத்து மன அழுத்தத்தில் பன்னீர்செல்வம் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்