Rock Fort Times
Online News

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா – 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது…

தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. இதில் மூன்றாம் படைவீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகின்ற ஜனவரி 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.28ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது. 24 ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளி ரத புறப்பாடும் நடக்கிறது. 25 ம் தேதி தைப்பூசமும், 25 ஆம் தேதி மாலை 4.30 மணிக்குமேல் தேரோட்டமும் நடக்கிறது. 28 ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழாவும், இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்