திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் கு.க.செல்வம். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், பதவி கிடைக்காத காரணத்தால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கு சிறிது காலமே இருந்தவர் மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று( 3-01-2024) அவர் உயிர் இழந்தார். அவரது மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.