சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது 17 வயது மகனை காணவில்லை என 2 நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் எம்.ஜி.ஆர்.நகர் கழிவு நீரேற்ற தொட்டி அருகே கண்கள் தோண்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான சிறுவனின் உறவினர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், அவர் மாத்திரைக்கான தொகையை தராமல் தலைமறைவானதால்அவருக்கு பதிலாக சிறுவனை கடத்தியதும் தெரியவந்தது. மேலும், சிறுவனின் தந்தை ஜெகநாதனிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவர் பணம் தராததால், அந்த கும்பல் சிறுவனை 3 நாட்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதோடு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Comments are closed, but trackbacks and pingbacks are open.