தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது தித்திப்பான செங்கரும்போடு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும்தான். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவினியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானவை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமரிசையாக நடைபெற உள்ளது. தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடைபெறும் புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.