Rock Fort Times
Online News

மறைந்த முசிறி பிரின்ஸ் தங்கவேல் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வும், வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான பிரின்ஸ் எம்.தங்கவேல் சமீபத்தில் காலமானார். முசிறி யில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், பொறியாளர் இப்ராம்ஷா, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர், 1989ம் ஆண்டு அதிமுக ஜெயலலிதா அணியில் முசிறி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991ம் ஆண்டு ஒன்றுபட்ட அதிமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இவருக்கு சந்திரா எனும் மனைவியும், சக்கரவர்த்தி எனும் மகனும், சுபாஷினி எனும் மகளும் உள்ளனர். திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்