Rock Fort Times
Online News

திருச்சி காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்ட றிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி…

திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி ஐபிஎஸ் , இன்று ( 25.11.2023 ) திருச்சி கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்தை பார்வையிட்டதுடன் போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதோடு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பை பார்வையிட்டு காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். அதோடு மாநகராட்சி ஊழியர்களை கொண்டு காவலர் குடியிருப்பை சுற்றியுள்ள குப்பைகள், செடி கொடிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தார். இந்த ஆய்வின்போது போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்