திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது. இதையடுத்து நேற்று ( 21.11.2023 ) இரவு திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் வாலிபர் ஒருவா் கல்லை எடுத்து ஆற்றில் வீசி உள்ளார். அப்பொழுது திடீரென்று ஒரு முதலை ஆற்றில் வேகமாக நீந்தி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனடியாக தனது செல்போனை எடுத்து ஆற்றில் நீந்தி சென்ற முதலையை வீடியோ பதிவு செய்தார். இரவு நேரம் என்பதால் முதலை தெளிவாக தெரியவில்லை. காவிரி ஆற்றில் முதலைகள் நடமாடுவது திருச்சி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.