ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை …
திருச்சி நீதிமன்றத்தில் தீர்ப்பு...
திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் வீராசாமி ( வயது 59). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் வீராசாமி வீட்டில் குடியிருந்த சங்கர் மீனா என்ற பெண்ணிடம் எதிர் வீட்டில் வசித்து வந்த சுரேஷ் என்ற செபாஸ்டின் ஜெயபிரகாஷ் ( வயது 35) என்பவர் பிரச்சனை செய்துள்ளார். இதை வீராசாமி தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுத பூஜை தினத்தன்று வீராசாமி தன் வீட்டு வாசலில் சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், அவரது சித்தப்பா மகன்கள் விஜய் (எ) ஆரோக்கிய விஜய் (23) மற்றும் அஜீத் குமார்(19) ஆகியோர் வீராசாமியிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததுடன், கைகளால் அவரை தாக்கியுள்ளனர்.இதை தட்டிக்கேட்ட வீராசாமியின் மகன் கோபால்சாமியையும் தாக்கினர். மேலும் சுரேஷ் அரிவாளை எடுத்து வந்து கோபால்சாமியை வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வீராசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இதுகுறித்த புகாாின் போில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷிற்கு 3 ஆண்டு சிறை தண்டணையும், ரூ. 3,500 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டணையும், விஜய் மற்றும் அஜீத்குமார் ஆகிய இருவருக்கும் தலா ரூ.3, 500 அபராதமும், கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறை தண்டணையும் விதித்து நீதிபதி மீனா சந்திரா தீப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு கூடுதல் அரசு வழக்கறிஞா் ஹேமந்த் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.