கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் சிலா் மது குடிப்பதற்காக பணம் கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் முதலாமாண்டு மாணவா் ஒருவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவாின் பெற்றோர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஜூனியர் மாணவரை ராகிங் செய்ததாக சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். ராகிங்கை தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கோவையில் பிரபல தனியார் கல்லூரியில் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.