திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சி பள்ளிவிடை கிராமம் சாய்சிட்டியில் உள்ள அம்மையப்பன் நகரைச் சேர்ந்தவர் 63 வயதான பரமேஸ்வரி. இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.44, 500 பணம், 2 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான மீனாட்சிசுந்தரம் வீட்டில் 5.5 கிராம் தங்கம், ரூ.50,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் 57 வயதான சாய்குமார் வீட்டில் 250 கிராம் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தனர். இந்த வீட்டின் உரிமையாளர் கொடைக்கானலில் உள்ளார். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள், மோப்பநாய் நிலா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் நிலா வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. இச்சம்பம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் ரூ.94,500 ரொக்கம் , 21.5 கிராம் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போய் உள்ளது குறிப்பிடதக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.