Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்க கூடாது!!

கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமை செயலாளா் சிவதாஸ் மீனா  மற்றும்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபெற்றுள்ள 2 நாள் கூட்டத்தில், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்புகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

“பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு ;அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால், தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நாளை இரண்டாவது நாள் கூட்டம் நடக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்