நிர்மலா சீதாராமனுடன் அதிமுக நிர்வாகிகள் திடீர் சந்திப்பால் பரபரப்பு…!
மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமா?
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஜெயக்குமார், பாஜகவுடன், அதிமுக இனி கூட்டணி வைக்காது என்று அதிரடியாக அறிவித்தார்.
அதேபோல, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இனி பா.ஜ.க.வுடன் அதிமுக இணைந்து செயல்படாது, அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டணி முறிவு தொடர்பாக அவர் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் 5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர். அவர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அப்போது பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உடனிருந்தாா். இதனால், பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.