திருச்சி மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளர்கள் 3 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் 19 பேர், திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், திருச்சி மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றி வந்த ராஜேஷ் கண்ணா கோவை மாநகராட்சிக்கும், ரகுராமன் கடலூர் மாநகராட்சிக்கும், ஜெகஜீவராமன் மதுரை மாநகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக வேலூர் மாநகராட்சியிலிருந்து சந்திரசேகர், சேலம் மாநகராட்சியிலிருந்து செந்தில்குமார், அருப்புக்கோட்டை நகராட்சியிலிருந்து ராமலிங்கம் ஆகியோர் திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.