Rock Fort Times
Online News

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 780க்கும் மேற்பட்டோர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 13.09.2023 ) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 26 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள பல ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்