திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சாா்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா…
17 கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது...
திருச்சி மேலப்புதூரில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல, இந்த ஆண்டு ஆசிரியர் தின விழா மருத்துவமனை வளாகத்தில் இன்று ( 08.09.2023 ) கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி , இந்த ஆண்டு டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் நினைவாக ” டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் நினைவு விருது” 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் சிறந்த சேவை மற்றும் சமூகப் பணியாற்றிய நபருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான விருதினை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டாி கிளப் ஆளுநா் (தோ்வு) ராஜா கோவிந்தசாமி கலந்துகொண்டு சிறந்த பேராசிரியர்களுக்கு விருதினை வழங்கினார். இவ்விழாவின் முக்கியத்துவத்தை கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மு.பிரதீபா முன்னிலையில், டாக்டர் பேராசிரியர் வி.எம்.லோகநாதன் எடுத்துரைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு செய்திருந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.