ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. பூ கட்டும் தொழிலாளியான இவர் நேற்று கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் ஆற்றில் மூழ்கியதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியை தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில், கோவிந்தசாமி என்பதும், குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.