Rock Fort Times
Online News

திருச்சி: குடோனில் பதுக்கிய 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்….

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், ஆய்வாளர் மணிமனோகரன், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை சாலை கல்பாளையம் புவனேஸ்வரி நகர் பகுதியில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கிறது என்று சோதனை நடத்தினர். பின்னர் அந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அவைகள் அனைத்திலும் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், மண்ணச்சநல்லூர் அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும், மண்ணசச்சநல்லூர் காந்திநகரை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த குடோனுக்கு சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பன்னீர்செல்வத்தை கைது செய்த போலீசார், தியாகராஜனை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்