தமிழக அரசு, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டம், உழவர்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 5,000 விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.



அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.45.21 லட்சம் மானியத்தில் 50 விவசாயிகளுக்கு, பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி , நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் 50 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினர். நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, கதிரவன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் குமரகணேஷ், உதவி செயற்பொறியாளர்கள் கந்தசாமி, அசோக்குமார், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.