திருச்சி அருகே உள்ள கே.சாத்தனூர் சீரா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவரது தந்தை பொன்னையன்
உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். தந்தை இறந்ததால் ஹரிஹரசுதன் மனம் உடைந்தார். தந்தையின் மறைவால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அவர் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாருடனும் சரிவர பேசாமல் இருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரசுதன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை, அவரது தாய் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் ஹரிஹரசுதன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.