Rock Fort Times
Online News

16-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்….

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல்...

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் ‘முரசொலிமாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை கூடுவதை ஒட்டி, சிறப்பு கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்