உலகக் கோப்பை செஸ் போட்டி: மாக்னஸ் கார்ல்சென் ‘சாம்பியன்’
டை பிரேக்காில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினாா்..
‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்தநிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று ( 23.08.2023 ) நடந்தது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.
டைபிரேக்கரில் சட்டென்று யோசித்து மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரேபிட்’ முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் இரு வீரர்களும் விளையாடினர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்பட்டது. இதில் நாா்வே நாட்டின் மாக்னஸ் கார்ல்சென் 2 டை பிரேக்கா் சுற்றுகளிலும் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.