தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலியமங்கலத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.