திருச்சி அப்பல்லோ சிட்டி சென்டர் அவசர சிகிச்சை மையம் திறப்பு…!
அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்...
அப்பல்லோ மருத்துவ மனையின் ஓர் அங்கமாக அதிநவீன வசதிகளுடன் திருச்சி தில்லைநகர் 10- வது கிராஸ் மேற்கு விஸ்தரிப்பில் அப்பல்லோ சிட்டி சென்டர் அவசர சிகிச்சை மையம் 24/7 கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் , திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், கோ. அபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5-ன் தலைவா் விஜயலட்சுமி கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி (மதுரை பிராந்தியம்) நீலக்கண்ணன், மருத்துவமனை நிர்வாகி டாக்டர்.சிவம் ஆகியோர் அவசர சிகிச்சை மையத்தின் மேம்பட்ட மருத்துவ அம்சங்கள் மற்றும் சேவைகள் குறித்து விவரித்தனர். விழாவில், திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை முதுநிலை பொது மேலாளர் மற்றும் யூனிட் தலைமை சாமுவேல், பொது மேலாளர் சங்கீத் (ஆபரேஷன்) மற்றும் முதுநிலை மேலாளர் ஆனந்த ராமகிருஷ்ணன்( விற்பனை) உள்பட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்பல்லோ சிட்டி சென்டர் அவசர சிகிச்சை மையத்தில் குழந்தை மருத்துவம் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள், தகுதி வாய்ந்த மருத்துவ குழுவினர்களால் வழங்கப்படுகிறது. விபத்து, தீக்காயம் மற்றும் அனைத்து அவசர சிகிச்சைகளுக்கும் பகல் மற்றும் இரவு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிநவீன ஆய்வகத்தின் மூலம் ஈ.சி.ஜி., எக்கோ, டி.எம்.டி.மற்றும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் துல்லியமாக மேற்கொள்ளப்படுகிறது. டோர் ஸ்டெப் டயக்னோஸ்டிக்ஸ் எனப்படும் ரத்த பரிசோதனைகளும் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. வீட்டில் இருந்தே டோர் டெலிவரி மூலம் மருந்துகளை பெரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சேவைகளை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.