Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.50 லட்சம் பரிசு பெற போகும் திருச்சி மாநகராட்சி…!

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், திண்டுக்கல், ஆவடி, ஓசூர், தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி என மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வீதமும், நகராட்சியை பொறுத்தவரை முதலிடம் பெரும் நகராட்சிக்கு ரூ 30 லட்சம், இரண்டாம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ.20 லட்சம், மூன்றாம் இடம் பெறும் நகராட்சிக்கு ரூ 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. பேரூராட்சியை பொறுத்தமட்டில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பேரூராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 13 கருப்பொருளை மையமாகக் கொண்டு சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், சிறந்த மாநகராட்சிக்கான முதலிடத்தை திருச்சி மாநகராட்சியும், இரண்டாவது இடத்தை தாம்பரம் மாநகராட்சியும் பிடித்தன. இந்த மாநகராட்சிகளுக்கு விருதுடன் ரூ. 50 லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது. சென்னையில் நாளை ( 15.08.2023 ) நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதினை திருச்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் தாம்பரம் மேயாிடம் வழங்கவுள்ளார். இதேபோல, சிறந்த நகராட்சிகளாக ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகியவற்றுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்