கூட்டுக்குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது…!
மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம்...
திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆற்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளம் மூடப்பட்டிருந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை அறியாத பஸ் டிரைவர் அங்கு சென்றபோது பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பள்ளத்தில் சரியத் தொடங்கியது. உடனே பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அவசரம், அவசரமாக கீழே இறங்கினர். இதனிடையே பேருந்து முழுமையாக சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் பள்ளி சென்ற மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.