Rock Fort Times
Online News

திருச்சி அருகே மறுவாழ்வு மையத்தில் யானைகள் தின விழா …!

திருச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம் .ஆர். பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் இன்று (12.08.2023) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் என். சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் , உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கோபிநாத், கிருஷ்ணன், தினேஷ்குமார் , ரவி மற்றும் ஊழியர்கள் யானைகளுக்கு உணவு, பழ வகைகள் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த உணவு மற்றும் பழவகைகளை யானைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்