Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகாிப்பு…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. பயணிகளை கையாள்வதில் திருச்சி விமானநிலையம் 11வது இடத்தில் உள்ளது. தற்போது ரூ.951 கோடியில் மொத்தம் 60.723 சதுர மீட்டரில் புதிய முனையம் அமைக்கப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.
இது குறித்து திருச்சி விமானநிலைய அதிகாரி கூறுகையில் :

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் திருச்சி விானநிலையம் ரூ.31.51 கோடி லாபம் ஈட்டியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவையாக சிங்கப்பூருக்கு 4, மலேசியாவுக்கு 3, கொழும்பு, சார்ஜா, துபாய் ஆகிய நாடுகளுக்க தலா 1 என 10 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது வாரத்திற்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 29-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்திற்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வழங்கப்படும் வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 76லிருந்து 107 ஆக அதிகரிக்கும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்