Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே கணவனை வெட்டி கொன்ற கள்ளக்காதலன் கைது…..

திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சரவணன் (48) பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும் ஆஷா சர்மிலி, சுவாதி, ஹரிணி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ஆஷா சர்மிலி சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், சுவாதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். ஹரினி திருவெறும்பூர் ஐடிஐயில் படித்து வருகிறார். இந்த நிலையில் சவுந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் காண்ட்ராக்ட்டரிடம் மேலாளராக வேலை பார்த்து வரும் இலால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பருடன் சவுந்தரவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது இருவருக்கும் இடையே காதலாக மாறி உள்ளது.
இந்த நிலையில் சவுந்தரவள்ளி தனது மகள் ஹரிணியை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் சரவணன் வீட்டிற்கு சென்று சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்படி குடிக்க வைத்ததில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சவுந்தரவள்ளிக்கு போன் செய்து சரவணனை வெட்டி கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக சௌந்தர்வள்ளி பந்தல் காண்ட்ராக்டர் பால்ராஜ் என்பவருக்கு தகவல் சொல்லியுள்ளார். இதுகுறித்து பால்ராஜ் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராதாகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினா் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்