என்.எல்.சி.க்கு எதிராக முற்றுகை போராட்டம்; அன்புமணி ராமதாஸ் கைது….!
போலீஸ் வாகனம் நொறுக்கப்பட்டதால் பரபரப்பு...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ( 28.07.2023 ) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பா.ம.கவினர் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

போலீசார் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரத்தை கலைத்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு விரைகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.