Rock Fort Times
Online News

96 வயது சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயற்சி….

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 96). சுதந்திர போராட்ட தியாகி. இவர், தனது மகனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், இடிந்த தனது வீட்டை புதுப்பித்து தர வேண்டும் என்று கூறி அங்குள்ள காமராஜர் சிலை முன்பு கோரிக்கைகள் அடங்கிய அட்டையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுதந்திர போராட்ட தியாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்