திருச்சி, திருவானைக்காவல் நெல்சன் ரோட்டை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி பேசம்மாள் (வயது 95). கணவர் இறந்துவிட்ட நிலையில், பேசம்மாள் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்த நிலையில், இவர் இன்று காலை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி,2 பவுன் வளையல், அரை பவுன் தோடு என மொத்தம் ஐந்தரை பவுன் நகைகளும் காணவில்லை. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.