Rock Fort Times
Online News

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய டிரைவருக்கு 7 ஆண்டு சிறை !

சென்னையை சேர்ந்தவர் ஆர். மணி ( வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர் மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு அக்டோபர் 31 -ம் தேதி லாரியில் ஏற்றப்பட்ட சுமைகளில் பாதி இறக்கப்பட்ட நிலையில் மீதி சுமைகளுயுடன் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு அங்கு சந்தோஷ் குமாரும், மணியும் உணவு உட்கொண்டனர். பின்னர் லாரியை ஓட்ட மணி முயன்றுள்ளார். அப்போது ஏற்கனவே இருக்கையில் அமர்ந்திருந்த சந்தோஷ்குமார், மணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச் சென்று விட்டார்.
இதுகுறித்து மணி, ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை மீட்டனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய சந்தோஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்