வெயில் குறையாததால் தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு..
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
கோடை விடுமுறைக்கு பின்பு தமிழ்நாட்டில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , வெயிலின் தாக்கம் குறையாததால் கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வேலை நாட்களை ஈடு செய்யும் பொருட்டு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.