ஆந்திராவில் இருந்து பேருந்தில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியான எலாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தபோது அதில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் பையில் 4000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி(26) என்பவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் அவரிடம் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அந்த போதை மாத்திரைகளை அவரிடம் கொடுத்து அனுப்பிப்பது யார்? ,யாரிடம் கொடுக்க சொன்னார்கள்?, இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட குப்புசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.