மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கூட்டங்களையும், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனையைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என்றும் டாஸ்மாக்ஊழியர்களுக்கு அறிவுறுத்திஉள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக மதுபானங்கள் விற்பனையானால், அந்தக் கடைகளில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மண்டல மேலாளர் அலுவலகத்துக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பி வருகிறோம். அதில், 52 வகையான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் மதுபானமும், கடந்த ஆண்டு அதே நாளில் விற்பனை செய்யப்பட்ட மதுபான அளவும் ஒப்பிடப்படுகிறது. அதில், 30 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு இருந்தால் எந்தப்பிரச்சினையும் இல்லை. அதற்கும் கூடுதலான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் பணியாளரிடம் மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்தப்படும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.