Rock Fort Times
Online News

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் போதை பொருட்கள் விற்றதாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் (32) தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்திருந்தபோது அங்குள்ள பள்ளி, கல்லூரி அருகே ஆட்டோவில் அமர்ந்து கொண்டு ஒரு கும்பல் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் வைத்து போதை பொருட்களை விற்ற திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26) மற்றும் அவரது தாய் ரமிஜாபேகம் (43), தம்பி மனைவி ஆஷிகா பானு (20) ஆகிய 3 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும், அந்த ஆட்டோவை சோதனையிட்டபோது அதில், பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து போதைப்பொருள் விற்பதற்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ.360 ரொக்கம், 33 போதை மாத்திரைகள், 12 ஊசிகள் ஒரு அரிவாள், ஒரு வால் மற்றும் மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஹசன்அலி மீது திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக 12 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்