தமிழகத்தில் மேலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் ‘டிரான்ஸ்பர்’…- டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு புதிய பொறுப்பு..!
தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சில ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், சிலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டு வருகிறார். இன்று( மே 14) காலை தமிழக காவல்துறையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நுண்ணறிவு பிரிவு டிஜிபியாக இருந்த பால நாகதேவி ஐபிஎஸ், தற்போது சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மொத்தம் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐஜி செந்தில்வேலன் காவலர் பயிற்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் பொறுப்பை வகித்துவந்த ராஜீவ்குமார் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காலையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.