பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் இன்று( மே 14) முதல் தனது பணியைத் தொடங்கியது. சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி மேற்பார்வையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதற்கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண் காவலர்கள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

Comments are closed.