திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வரும் 26 தாசில்தார்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கலெக்டர் அலுவலக ‘ஐ’ பிரிவில் பணியாற்றிய ரவி, துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர் பிரகாஷ், திருச்சி மேற்கு தாசில்தாராகவும், அங்கிருந்த விக்னேஷ், தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், அங்கிருந்த சிவகுமார், மணப்பாறை சிப்காட் நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த இந்திராகாந்தி, திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், தேசியநெடுஞ்சாலை தனி தாசில்தார் (நிலமெடுப்பு) செல்வம், மணப்பாறை தாசில்தாராகவும், அங்கிருந்த தனலட்சுமி திருவெறும்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, மணப்பாறை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுந்தரபாண்டியன், முசிறி தாசில்தாராகவும், அங்கிருந்த பாத்திமா சகாயராஜ் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், லால்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சரவணபிரபு மருங்காபுரி தாசில்தாராகவும், அங்கிருந்த செல்வசுந்தரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், துவாக்குடி டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) மோகன், துறையூர் தாசில்தாராகவும், அங்கிருந்த வனஜா, முசிறி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், திருச்சி ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ராகவன், லால்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நளினி மணப்பாறை சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகாமாட்சி மருங்காபுரிக்கும், திருவெறும்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அண்ணாதுரை, திருச்சி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருச்சி கிழக்கு உணவுப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் குணசேகரன், திருச்சி துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் சத்யபாமா, திருச்சி கிழக்கு உணவுப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தார் கண்ணகி, துவாக்குடி டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளராகவும், திருச்சி ஆர்டிஓ நேர்முக உதவியாளர் அகிலா, அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், அங்கிருந்த லஜபதிராஜ், டாஸ்மாக் சில்லரை விற்பனை உதவி மேலாளராகவும், ஸ்ரீரங்கம் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை 225 நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் ஆனந்த், துறையூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.
Comments are closed.