தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்றதால் அந்த பொறுப்புக்கு சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த தினகரனுக்கு அதே துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி, குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேந்திரகுமார் ரத்தோட் சமூகநீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆணையராக இருந்த மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை சரக டிஐஜியாக பரவேஷ் குமார், வடசென்னை சட்டம்- ஒழுங்கு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த துரை, தமிழக காவல் துறை நலன் பிரிவுக்கு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
Comments are closed.