திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29).இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 15 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர் இந்த சம்பவம் குறித்து கலைக்கோவன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.