திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் விவசாயிகளுக்கு 13 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா- நாளை 29-ம் தேதி நடக்கிறது…!
தமிழகத்தில் மண்வளம் மற்றும் பசுமை பரப்பை பரப்பும் பொருட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் மற்றும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்கும் உயர்தர சைவ உணவகமான ஸ்ரீ சரஸ்வதி கஃபே, ஈஷா அறக்கட்டளையின் மண் காப்போம் இயக்கம் இணைந்து திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள மோரணி மலை எதிரில் ஈஷா நர்சரியில்
நாளை (29-11-2024) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, விவசாயிகளுக்கு 13 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை நடத்துகிறது. விழாவில், மருங்காபுரி ஜமீன்தார் கிருஷ்ண விஜயன், பாரதிய ஜனதா கட்சி எச். ராஜா, துவரங்குறிச்சி சபரி நர்சரி குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், ஈஷா தன்னார்வ தொண்டர்களும், விவசாய பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சரஸ்வதி கஃபே நிர்வாக பங்குதாரர் கௌரி சங்கர்
முன்னின்று சிறப்பாக செய்து வருகிறார்.

Comments are closed.