திருச்சி, திருவெறும்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் 11 பவுன் நகை வெள்ளிப் பொருட்கள் திருட்டு ! போலீசார் விசாரணை !
திருச்சி, திறுவெறும்பூர் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 11 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியா (40). இவரும் இவரது குழந்தையும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி, தனது குழந்தையுடன் தனது தாய் வீடான கீழ கல்கண்டார் கோட்டைக்கு சென்றவர் 30ம் தேதி மாலை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் வெளிகேட் கதவு, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவும் திறக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு சத்தியா அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு சத்தியா தகவல் கொடுத்து உள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார், பீரோவை திறந்து பார்த்த பொழுது பீரோவில் இருந்த டாலர் செயின் பவுன், டாலர் உடன் கூடிய சிறிய செயின் 3 பவுன், ஒரு ஜோடி வளையல் 3 பவுன் என 11 பவுன் நகை மற்றும் 300 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக சத்தியா கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Comments are closed.