Rock Fort Times
Online News

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி கோட்ட மூத்த ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபி ஷேக் உத்தரவின்பேரில், உதவி பாதுகாப்பு கமிஷனர் பிரமோத் நாயர் மேற்பார்வையில், இன்ஸ் பெக்டர் செபாஸ்டியன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜா உள்ளிட்ட ரெயில்வே பாது காப்பு படையினர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பதும், அவர் தனதுபையில் அரை கிலோ கஞ்சாவை 100 பொட்டலங்களாக பிரித்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்