Rock Fort Times
Online News

திருச்சி அருகே கல்லணை கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 3 பேர் காயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் பென்னி சேவியர் (45). இவர் காட்டூரில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நண்பர்கள் மூவருடன் தனது காரில் கிளியூரை நோக்கிச் சென்றார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த கல்லணை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பென்னி சேவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது நண்பர்கள் 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்