Rock Fort Times
Online News

‘ராக்போர்ட் டைம்ஸ்’ தமிழ் வார இதழ் உதவி ஆசிரியர் ஆறுமுகசாமி இல்லத்திருமண விழா…* கும்பகோணம், சுவாமிமலையில் கோலாகலமாக நடைபெற்றது..!

‘ராக்போர்ட் டைம்ஸ்’ தமிழ் வார இதழ் உதவி ஆசிரியர் மற்றும் டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் உ.ஆறுமுகசாமி- கீதா தம்பதியரின் இளைய மகள் டாக்டர் ஏ.மணிமேகலை, டி.எம்.தங்கவேல்- மீனாட்சி தம்பதியரின் மகன் டாக்டர் ரஞ்சித்குமார் ஆகியோரது திருமணம், கும்பகோணம் அடுத்துள்ள சுவாமி மலையில் இன்று (20-11-2026) அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவில் ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன், சீனியர் சப்-எடிட்டர் எம்.நாகராஜன், மூத்த பத்திரிகையாளர் க.சண்முக வடிவேல் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் . திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.ராஜேஷ்- ஏ. திவ்ய பாரதி மற்றும் மணமகன், மணமகள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்