Rock Fort Times
Online News

திருச்சியில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது…

திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் சரண் பிரசாத் தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் முகமது மொய்தீன் (வயது 27) என்பவர் போலீஸ்காரரின் ரோந்து வாகனத்தை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கீழே கிடந்த கல்லை எடுத்து சரண் பிரசாத்தை தாக்கியுள்ளார். இதுகுறித்து சரண் பிரசாத் கொடுத்த புகாரின்பேரில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது மொய்தினை கைது செய்தனர். இதேபோல, ஸ்ரீரங்கம் போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா, திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக அதே பகுதியை சேர்ந்த டேவிட், வினோத்குமார், செல்வராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் டேவிட், வினோத்குமார் ஆகிய 2 பேரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்