Rock Fort Times
Online News

நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்…* திமுகவுக்கு அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை..!

தமிழக அரசியல் களம் தினம், தினம் ஏதாவது ஒரு வகையில் பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே ‘வார்த்தை போர்’ நடந்து வருவது மேலும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஜெயித்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் பக்கம் சாய்ந்து அமைச்சர் பதவி பெற்றதை திமுக கடுமையாக சாடி வருகிறது. இதற்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னியரசு, “திமுக எங்களை பார்த்து துரோகம் செய்ததாக கூறுகிறது. ஆனால் உண்மையில் யார் யாருக்கு துரோகம் செய்தார்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள். எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த காலத்திலேயே அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கியிருக்க வேண்டும்”. திமுகவினர் தங்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவது அவர்களின் ஆற்றாமையின் வெளிப்பாடாகும். பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பினால்
அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்” என்று திமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்