அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் கூலித் தொழிலாளி சம்பவத்தன்று இவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது பள்ளி சிறுமி ஒருவரை வீட்டில் விடுவதாக பைக்கில் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பயந்த அந்த சிறுமி சத்தம் போட்டு பைக்கிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை அவ்வழியாக வந்த ஒருவர் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு வீட்டில் சென்று பத்திரமாக சேர்த்தார். நடந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸில் புகாரளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.